ட்விட்டர் (Twitter) பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – சந்தா முறை அறிவிப்பு!!

0
ட்விட்டர் (Twitter) பயனாளர்களுக்கு புதிய அப்டேட் - சந்தா முறை அறிவிப்பு!!
ட்விட்டர் (Twitter) பயனாளர்களுக்கு புதிய அப்டேட் - சந்தா முறை அறிவிப்பு!!
ட்விட்டர் (Twitter) பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – சந்தா முறை அறிவிப்பு!!

ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களை கவரும் வகையில் தற்போது புதிய சந்தா முறையை அறிவித்துள்ளது. அதில் பல அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்டுகிறது. தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அப்டேட்:

நாட்டு மக்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது பிரபல சமூகவலைத்தள நிறுவனம் ட்விட்டர். உலகம் முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தலைவர்கள் அனைவரும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு இந்த தளம் மிக முக்கியமானவையாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக அளவிலான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் அவ்வவ்போது ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களை கவரும் வகையில் பல முக்கிய அப்டேட்களை அறிவித்து வரும். அவை அனைத்தும் ட்விட்டர் பயனாளர்களை வெகுவாக கவர்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் தன் பயனாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீல டிக் வசதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது நிறுவனம் ட்விட்டர் புளூ என்ற புதிய சந்தா முறை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

ட்விட்டர் புளூ குறித்த தகவல் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றுள்ளது. இந்த சேவையில் பயனர்கள் பல நிறங்கள் அடங்கிய தீம், பதிவு செய்த ட்விட்களை திரும்ப பெறும் வசதி என்று பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த சேவைக்கான தொடக்க கட்டணம் மாதத்திற்கு 2.99 டாலர், இந்திய மதிப்பில் ரூ.218 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!