WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கான புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருவதை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

வாட்ஸ்அப் அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் விரைவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் செயலியான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல புதிய அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து அவற்றை சோதனை முயற்சியில் பரிசோதித்து பயனர்களின் பயன்பாட்டிற்காக வழங்குகிறது. வாட்ஸ்அப் செயலி ஆண்டிராய்ட் பயனர்களுக்கு என்று தனி பதிப்பையும், ios பயனர்களுக்கு என்று தனி பதிப்பையும் வழங்கியுள்ளது. இதனால் அந்தந்த சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

வாரத்தில் 4.5 நாட்கள் மட்டுமே வேலை – ஜன.1 முதல் அமல்! ஊழியர்கள் மகிழ்ச்சி!

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ‘Waveform’ வடிவில் வாய்ஸ் மெசேஜ்கள் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.21.25.11 அல்லது வாட்ஸ்-அப் iOS பீட்டா வெர்ஷன் 2.21.240.18 பதிப்புகளுக்கு இந்த வசதி முதல் கட்டமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை அறிமுகப்படுத்துவதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் முயன்று வந்ததாகவும், பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தினை அனைத்து தரப்பு பயனர்களுக்கு வழங்குவதற்கான முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!

பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Waveform’ வடிவில் உள்ள வாய்ஸ் மெசேஜ்களில் ஒலியின் பிட்சுக்கு ஏற்ற வகையில் ஏற்ற இறக்கத்தை பயனர்கள் கவனிக்க முடியும். இந்த வசதியினை போல், புதிதாக வாட்ஸ் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் மெசேஜ் ரியாக்ஷன் நோட்டிபிகேஷன் ஆப் செய்து வைக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியினால் கிடைக்கும் சிறப்பான அனுபவங்களினால் வாட்ஸ்அப் அதிக பயனர்களை பெரும் என்பதில் ஐயமில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!