உங்களின் லாபத்தை இரட்டிப்பாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
உங்களின் லாபத்தை இரட்டிப்பாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
உங்களின் லாபத்தை இரட்டிப்பாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
உங்களின் லாபத்தை இரட்டிப்பாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்ததன் விளைவாக Debt ஃபண்ட் முதலீடுகளுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தற்போது நடப்பு ஆண்டில் எந்தெந்த வங்கி மற்றும் பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று நாணயக் பணக்கொள்கை கூட்டம் நடத்தியது. இதன் முடிவில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுவாக நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது இதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளும் தங்களின் கடன் சுமையை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும்.

முன்னதாக கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 4.40% ஆக உயர்த்தியது. அதன் பின்னர் ஜூன் மாதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்திவாசிய விலை பொருட்களின் விலை அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படும். இதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி Debt ஃபண்ட் முதலீடுகள் மீதான வட்டியையும் உயர்த்தியுள்ளது. அதனால் இதில் கணக்கு வைத்துள்ளவர்கள் தற்போது புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நாடி வருகின்றனர்.

தமிழக கல்லூரிகளில் பாட திட்ட மாற்றம்.. அரசின் அதிரடி நடவடிக்கை – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

அதனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இரட்டிப்பு லாபங்களை தரும் திட்டங்களை தேர்வு செய்வது சற்று கடினமாக உள்ளது. தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய சிறந்த வங்கி மற்றும் பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் முதலீடு செய்வதற்கு முன்பாக உங்களின் ஆலோசகரிடம் விவரங்களை கேட்டறிந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. ஆதித்யா பிர்லா சன்லைஃப் பேங்கிங் (Aditya Birla Sun Life Bank) & டெட் ஃபண்ட் ( PSU Debt Fund)

2. டிஎஸ்பி பேங்கிங் ( DSP Bank ) & பிஎஸ்யூ டெட் ஃபண்ட் (PSU Debt Fund)

3. கோடக் பேங்கிங் ( Kotak Bank ) & பிஎஸ்யூ டெட் ஃபண்ட்( PSU Debt Fund)

4. ஐடிஎஃப்சி(IDFC) பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃப்ண்ட் (PSU Debt Fund)

5. ஆக்சிஸ் (Axis Bank) பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட்(PSU Debt Fund)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here