WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதனால் பயனர்கள் புதிய அனுபவத்தை பெற முடியும் என்பதால் பயனர்களின் மத்தியில் ஆர்வம் அதிக அளவில் உள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் விரைவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் செயலியான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல புதிய அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து அவற்றை சோதனை முயற்சியில் பரிசோதித்து பயனர்களின் பயன்பாட்டிற்காக வழங்குகிறது. வாட்ஸ்அப் செயலி ஆண்டிராய்ட் பயனர்களுக்கு என்று தனி பதிப்பையும், ios பயனர்களுக்கு என்று தனி பதிப்பையும் வழங்கியுள்ளது. இதனால் அந்தந்த சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தற்போது 6 புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழைப்புகளுக்கான வசதி:

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய புதுப்பிப்பு மூலம் லேப்டாப் அல்லது கணினியில் Windows / Mac இல் இயங்கும் வாட்ஸ்அப்பை நாம் பதிவேற்றம் செய்திருந்தால் அதன் மூலமாகவே நாம் நமது வாட்ஸ்அப் கால்களை பெறலாம்.

பணம் செலுத்தும் வசதி:

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள WhatsApp பேமெண்ட் முறை மூலம் பயனர்கள் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் சிஸ்டத்தின் (யுபிஐ ) முறை மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்.

ஐபோன் TO ஆண்ட்ராய்டு:

வாட்ஸ்அப்ல் உள்ள செட்டிங்ஸ் என்ற அமைப்பின் கீழ் உள்ள செயல்முறைகள் மூலம் நமது ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு அனைத்து சாட்களையும் மாற்றிக் கொள்ளலாம். இதற்காக USB-C கேபிள் மட்டுமே தேவைப்படுகிறது.

டிஸ்அப்பியரிங் முறை:

டிஸ்அப்பியரிங் மெசெஜ்ஸ் என்ற புதிய அம்சத்தின் மூலம் நாம் அனுப்பும் செய்திகளையும், கோப்புகளையும் பெறுபவர்கள் ஒரு முறை மட்டுமே காண முடியும்.

மியூட் செய்யும் வசதி:

நாம் அனுப்பும் வீடியோக்களில் உள்ள சத்தத்தை பெறுநர் கேட்க விரும்பாத போது நாம் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மல்டி டிவைஸ் வசதி:

நமது லேப்டாப், பிசி அல்லது டேப்லெட்டில் ஒரே நேரத்தில் WhatsApp செயலியை பயன்படுத்த இந்த அம்சம் உதவியாக உள்ளது. இந்த மல்டி டிவைஸ் அம்சம் பல சாதனங்களில் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!