Instagram Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி போட்டோ, வீடியோக்களை பதிவிடலாம்!

0
Instagram Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி போட்டோ, வீடியோக்களை பதிவிடலாம்!
Instagram Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி போட்டோ, வீடியோக்களை பதிவிடலாம்!
Instagram Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி போட்டோ, வீடியோக்களை பதிவிடலாம்!

உலகம் முழுவதும் அதிக பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களின் வசதிக்கேற்ப புதிய அப்டேட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் புதிய அறிமுகம்:

உலகம் முழுவதும் அதிக பயனர்களை கொண்டுள்ளது தான் இன்ஸ்டாகிராம். இந்த மென்பொருள் ஒரு பொழுது போக்கு மென்பொருள் அதாவது, டிக்டாக் போன்றதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் கடந்த 2012 ம் ஆண்டு அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. தற்போது உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அனைவராலும் ஈர்க்கப்பட்ட ஒரு செயலியாக வளம் வந்து கொண்டிருப்பது தான் இன்ஸ்டாகிராம். இந்த இன்ஸ்டாகிராம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் மேம்படுத்தி வருகிறது. இதில் மொபைல் போன் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்கள் போஸ்ட் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஒரு சிலர் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் ஒரு வசதி இல்லாமல் இருந்தது. அதாவது கணினியில் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்க்க முடியும்.

Post Office அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – விதிகள் மாற்றம்!

ஆனால் கணினி வாயிலாக வீடியோ மற்றும் போட்டோக்களை போஸ்ட் செய்ய முடியாது. அந்த வசதி கணினியில் கூகிள் இணைப்பை பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். அதனால் அனைவராலும் அதனை பயன்படுத்த முடியவில்லை. பயனர்கள் மத்தியில் இது ஒரு குறையாகவே இருந்து வந்தது. கூடிய விரைவில் அந்த வசதிகள் இன்ஸ்டாகிராமில் கொண்டுவரப்படும் என்று அந்நிறுவனம் ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் நீங்கள் உங்களது போட்டோவை உங்களது கணினி வாயிலாகவே போஸ்ட் செய்து கொள்ளலாம். மேலும், பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் இப்போது பயனர்களுக்கு இந்த செயலியில் இணைந்திருக்க இன்னும் பல காரணங்களை வழங்குகிறது.

இன்று முதல் 4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நீங்கள் பிரவுசரில் இன்ஸ்டாகிராமை தேடலாம், உள்நுழைந்து ‘+’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உள்ளடக்கத்தைப் பதிவேற்றத் தொடங்கலாம். அதனை தொடர்ந்து கோலாப்ஸ் என்று புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது பதிவுகளுக்கு இரண்டு நபர்களை இணை ஆசிரியர்களாக நியமிக்கின்றது. இந்த முறையில் ஒருவரை ஈடுபடுத்த மற்றொருவரை டேக்கிங் திரையில் இன்வைட் செய்ய வேண்டும். இந்த வழியில் இரு பயனர்களுக்கும் பின்தொடர்பவர்கள் இடுகையைப் பார்க்க முடியும். இந்த அம்சம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும் புதிய இடுகை பட்டனிலிருந்து லாப நோக்கற்ற நிதி திரட்டல்களைத் தொடங்க’ இன்ஸ்டாகிராம் உங்களை அனுமதிக்கும்’ என்றும் Engadget பரிந்துரைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!