வெளியான டிஎன்ஏ டெஸ்ட் முடிவு.. தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது டிஎன்ஏ டெஸ்டின் ரிப்போர்ட்டில் ஹேமாவும் லக்ஷ்மியும் தன்னுடைய குழந்தைகள் தான் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது. அவர் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க அவர் ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா சேர ஒரே வழி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது தான். அதை இத்தனை ஆண்டுகளாக செய்யாமல் இருந்த பாரதி தற்போது யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். இந்த டெஸ்ட் முடிவில் ஹேமாவும் லக்ஷ்மியும் தனக்கு பிறந்த குழந்தைகள் என வந்தால், கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் எனவும், அப்படி இல்லை என்றால் வெண்பாவை திருமணம் செய்து கொள்வேன் என முடிவு செய்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதற்கிடையே பாரதி காட்டிய போட்டோவில் இருப்பது தன்னுடைய அம்மா இல்லை என்ற உண்மை ஹேமாவிற்கு தெரிய வர அவர் பாரதி மீது கோவமாக இருக்கிறார். பாரதி பொய் சொன்னதால் ஹேமாவிடம் மன்னிப்பு கேட்க ஆனால் ஹேமா என்னுடைய அம்மா யார் என கேட்கிறார். பாரதி என்ன சொல்வார் என்பது பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.
பிக் பாஸ் 6: கடைசியில அழவே வச்சுட்டாங்க.. சக போட்டியாளரின் செயலால் தேம்பி தேம்பி அழும் ஜனனி!
Exams Daily Mobile App Download
மறுபக்கம் ரோஹித் வெண்பா திருமணத்திற்கு ஷர்மிளா ஏற்பாடு செய்ய, அதே நாளில் வெண்பா பாரதியுடன் திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர நேரமாக அதனால் பாரதி குழப்பமான நிலையில் இருக்கிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் ஹேமா லட்சுமி தன்னுடைய குழந்தைகள் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது, அதனால் வருத்தப்பட்ட பாரதி கண்ணம்மாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் அடுத்து வரும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்