அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்!

0
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பிலிருந்து விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. தகுதியானவர்களுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் ரேஷன் கார்டு பயனாளி ஒருவர் ரேஷன் கார்டை தொலைத்து விட்டால், அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும், எப்படி நகல் கார்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

கார்டு தொலைந்தாலும் கவலை இல்லை:

தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் பல கோடி பயனாளிகள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – சரியும் பொருளாதாரம்!

மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் பெற வேண்டுமானால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதாரை இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 ஆம் தேதி ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டு கவனக்குறைவால் தொலைந்து விட்டால், நாம் செய்வது அறியாமல் குழப்பத்தில் இருப்போம். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால், சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நகல் அட்டையை ஆன்லைனிலும், நேரடியாகவும் எளிதாக உருவாக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைன் வழிமுறை:

  • முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • இப்போது முகப்பு பக்கத்தில் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும். அடுத்ததாக ஒரு ஆன்லைன் படிவம் வரும். அந்த படிவத்தில் கேட்கப்படும்
  • அனைத்து தகவல்களையும் நிரப்பவும். இப்போது தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும்.

ஆஃப்லைன் முறை:

  • நபர் ஒருவர், மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்போது நகல் ரேஷன் கார்டு படிவத்தை வாங்கி, அதைப் பூர்த்தி செய்த பிறகு, அதனுடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நகல் ரேஷன் கார்டு வாங்குவதற்கு, ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!