WhatsApp Update: இனி ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்.. ஆகா இது ரொம்ப புதுசா இருக்கே!

0
WhatsApp Update: இனி ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்.. ஆகா இது ரொம்ப புதுசா இருக்கே!
WhatsApp Update: இனி ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்.. ஆகா இது ரொம்ப புதுசா இருக்கே!
WhatsApp Update: இனி ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்.. ஆகா இது ரொம்ப புதுசா இருக்கே!

வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படும் புது புது அம்சங்கள் அனைத்தும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

WhatsApp ஸ்டேட்டஸ்:

வாட்ஸ் அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப்பில் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ் அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் அனைத்தும் அதன் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தற்காலிக புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணிநேரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மறைந்து விடும். 2017 ஆம் ஆண்டு தனது ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், தற்போது அதில் ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளது. அதாவது, ஸ்டேட்டசில் இனி பயனர்கள் வாய்ஸ் நோட்ஸ்-ஐ வைக்க முடியும்.

நீங்க Airtel பயனரா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு – மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download

இந்த அம்சத்தில் பயனர்கள் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று அவர்களின் குரல் குறிப்புகளைப் பதிவு செய்ய மையத்தில் உள்ள மைக் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். பயனர்கள் தங்கள் தனியுரிமை அமைப்புகளின் அடிப்படையில் அவர்களின் தொடர்புகளுக்கு குறுகிய குரல் செய்திகளைப் பகிர முடியும். பயனர்கள் தங்கள் குரலைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பின்னணி நிறத்தையும் மாற்றி அமைக்க முடியும், குரல் குறிப்பானது 30 வினாடிகள் வரை இருக்கும், மேலும், மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!