இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் – நெட்டிசன்கள் வரவேற்பு!

0
இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் - நெட்டிசன்கள் வரவேற்பு!
இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் - நெட்டிசன்கள் வரவேற்பு!
இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் – நெட்டிசன்கள் வரவேற்பு!

வாட்ஸ்அப் செயலியானது தற்போது சமீப காலமாக புதிய பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த புதிய அம்சமானது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்:

கடந்த மாதம், மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக மூன்று புதிய அம்சங்கள் WhatsApp இல் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அவை, குழுவில் இருந்து இதற்கு முன்னதாக வெளியேறியவர்கள், ஸ்கிரீன்ஷாட்டைத் தடுப்பது மற்றும் பயன்பாட்டில் உங்கள் ஆன்லைன் நிலையை மறைத்தல் போன்றவை ஆகும். ஐபோன் பயனர்களுக்கு அனைத்து புதிய கேமரா ஷார்ட்கட்டை அறிமுகப்படுத்தும் புதிய அம்சத்திலும் வாட்ஸ்அப் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது மற்றும் அதன் வெளியீட்டு தேதி இன்னும் அறியப்படவில்லை.

முன்னதாக நமது கான்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டும் அல்லது அனைவரும் நமது ஆன்லைன் நிலையை பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் செயலி செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய புதிய அப்டேடின் மூலம் பயனர்கள் மேலும் சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நாம் தேர்தெடுக்கும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நமது ஆன்லைன் நிலையை பார்க்க முடியும், இந்த அம்சம் சிலருக்கு மட்டுமே முன்னதாக வழங்கப்பட்டுள்ளது. எந்த வகையில் இந்த அம்சம் அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஆனாலும், இந்த குறிப்பிட்ட அம்சத்தை முன்னதாக பெற்ற பயனர் நீங்கலாக கூட இருக்கலாம்.

TNUSRB, TET, TNPSC, SBI, IBPS 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – Free Mock Test!! Register Now!!

Exams Daily Mobile App Download

இதை அறிந்து கொள்வதற்கு, உங்கள் வாட்ஸ்அப் செயலியில் சென்று,முதலில் “Account” பகுதியை திறந்து, அதில், “Privacy” என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், “Last seen and online” என்ற தேர்வுகள் இருந்தால் இந்த புதிய அம்சம் உங்களுக்கு கிடைத்துள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், “same as last seen” என்பதை தேர்வு செய்து கொண்டால், உங்களில் last seen ஐ பார்க்க கூடிய நபர்கள் மட்டுமே உங்களின் ஆன்லைன் நிலையையும் பார்க்க முடியும். வரும் வாரங்களில் இந்த அப்டேட் அதிக அளவிலானவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!