விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் நடக்க இருக்கும் புது ட்விஸ்ட் – ஹீரோ மாற்றம்?

0
விஜய் டிவி
விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் நடக்க இருக்கும் புது ட்விஸ்ட் – ஹீரோ மாற்றம்?

விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் நடிகர் அர்னவ் மாற இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வரும் நிலையில், அது குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்ன என்பது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்லம்மா சீரியல்:

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட செல்லம்மா சீரியல் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் பொதுவாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்கள் என்றால் அதற்கு தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில் கணவனை இழந்த பெண், குழந்தையை வைத்துக் கொண்டு படும் கஷ்டங்களை செல்லம்மா சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோ அர்னவ், சித்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் தன்னுடைய மனைவி திவ்யா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருக்கு இன்னும் பெயில் கிடைக்காமல் இருக்கும் நிலையில், தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது. அது குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது சித்து கதாபாத்திரத்தில் தொடர்ந்து அர்னவ் தான் நடிப்பார் எனவும், அவருக்கு பெயில் கிடைக்கும் வரை கதையில் சில மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல இயக்குனர் திருமுருகனின் புது சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! காரணம் இதுவா ?

Follow our Instagram for more Latest Updates

மேலும் சீரியலில் கடந்த வாரம் சித்துவின் நண்பராக நடிகர் ஜெமினி மணி அறிமுகமானார். மேலும் இன்று புதிதாக நடிகர் மோனிஷ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இருவரையும் வைத்து கதை கொண்டு செல்லப்படும் எனவும், அர்னவ் வந்த பின் சீரியல் கதை வழக்கம் போல இருக்கும் என்ற தகவல் வெளியாக இருக்கிறது. அப்படி அர்னவ் வெளியே வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!