
இனியாவை ஒதுக்கி வைக்க சொல்லும் ராதிகா, மோசமாகும் கோபி நிலைமை – “பாக்கியலட்சுமி” சீரியலில் திடீர் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபி திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்க, ராதிகாவின் அம்மா மூலமாக கோபிக்கு பெரிய சிக்கல் ஒன்று வர இருக்கிறது. அதாவது அவர் இனியாவிடம் இனி பேச கூடாது என சொல்ல அது கோபிக்கு பிடிக்காமல் இருக்க போகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியான பாக்கியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமே கோபி கதாபாத்திரம் தான். கோபி தன்னுடைய மனைவியை ஏமாற்றி கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்க, இப்போது அவருடைய ஆசைப்படி ராதிகாவை திருமணம் செய்ய போகிறார். இந்த விஷயம் கோபி அம்மாவிற்கு தெரிய வர எப்படி திருமணத்தை என்னை மீறி நடத்துகிறாய் என நான் பாக்கிறேன் என சவால் விடுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க கோபி தன்னுடைய மகள் இனியா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அடிக்கடி இனியாவை பற்றி பேசி கோபி வருத்தப்பட அதை எல்லாம் பார்த்த ராதிகாவின் அம்மாவிற்கு கோவம் வருகிறது. அதனால் அவர் ராதிகாவிடம், கோபி அடிக்கடி இனியாவை பற்றி பேசுவது சரியாக வராது. இனியா மூலமாக அந்த குடும்பத்துடன் நெருக்கமானால் கடைசியில் நீயும் மயூவும் ரோட்டில் தான் நிற்க வேண்டும். இனியா பாசத்தை காட்டி அம்மா அப்பாவை சேர்த்து வைக்க நினைப்பாள் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகா இப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா என சொன்னாலும் அம்மா சொல்வது சரி தான் என்ற எண்ணம் வருகிறது. அதனால் இனியாவை கூட்டிக் கொண்டு வர நினைக்கும் கோபிக்கு பெரிய ஏமாற்றமாக இருக்க போகிறது. மேலும் டாடி உடன் செல்ல தயாராக இருந்த இனியா ஏமாற இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அடுத்து வரும் எபிசோடில் ராதிகா, இனியாவுடன் இனி பேச மாட்டேன் என கோபி சொன்னால் தான் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என சொல்கிறார். அதனால் கோபி மனதை கல்லாகி இனியாவை இனி பேச வேண்டாம் என சொல்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்