ப்ளீஸ் அம்மா.. வேற கல்யாணம் பண்ணாதீங்க.. திடீரென தடை போட்ட மயூரா – அதிர்ச்சியில் கோபி, ராதிகா!

0
ப்ளீஸ் அம்மா.. வேற கல்யாணம் பண்ணாதீங்க.. திடீரென தடை போட்ட மயூரா - அதிர்ச்சியில் கோபி, ராதிகா!
ப்ளீஸ் அம்மா.. வேற கல்யாணம் பண்ணாதீங்க.. திடீரென தடை போட்ட மயூரா - அதிர்ச்சியில் கோபி, ராதிகா!
ப்ளீஸ் அம்மா.. வேற கல்யாணம் பண்ணாதீங்க.. திடீரென தடை போட்ட மயூரா – அதிர்ச்சியில் கோபி, ராதிகா!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி என்ன தான் குடும்பத்தை விட்டு சென்றாலும் இனியா மீது பாசமாக இருக்கிறார். இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க ஆனால் திடீரென மயூரா திருமணம் வேண்டாம் என சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவின் திருமண வாழ்க்கை முடிந்துள்ள நிலையில், இதையே காரணமாக வைத்து கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். முதலில் ராதிகா வேண்டாம் என நினைக்க ஆனால் சந்துருவும், ராதிகாவின் அம்மாவும் சேர்ந்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர். திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் ஜாம் ஜாம் என நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோபி எப்போதும் இனியா மீது மிகுந்த பாசமாக இருக்கிறார்.

இந்நிலையில் கோபி தன்னுடைய திருமணத்திற்கு ஈஸ்வரியும், இனியாவும் வர வேண்டும் என ஆசையுடன் இருக்கிறார். ஈஸ்வரியிடம் இது பற்றி கோபி பேச ஆனால் ஈஸ்வரி என்னை மீறி எப்படி நீ திருமணம் செய்து கொள்வாய் என கேட்கிறார். அதை பற்றி கவலைப்படாத கோபி, இனியாவை தன்னுடன் வைத்துக் கொள்ள நினைக்கிறார். அதனால் திருமணம் பற்றி இனியாவிடம் சொல்ல முடிவு செய்து, வெளியே கூட்டி சென்று இனியாவிடம் உன் அம்மா சரியில்லை அதனால் நான் ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறேன் என சொல்கிறார்.

கடைசி நேரத்தில் ராதிகா கால்லை வாரிய கோபி.. நின்று போன திருமணம் – பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

அதனால் இனியாவை நல்ல முடிவாக எடுக்க சொல்கிறார். கோபி இனியா மீது இவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து மயூராவிற்கு கோவம் வருகிறது. அதனால் மயூரா திடீரென ராதிகாவிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என சொல்கிறார். அதை கேட்டு சந்துருவும், ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வளவு நாள் கோபி அங்கிள் எப்படி இருந்தாரோ அது போலவே இருக்கட்டும் என மயூரா சொல்ல, ராதிகாவுக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here