நாட்டில் சுங்கச் சாவடிக்கு பதிலாக கண்காணிப்பு கேமரா – நிதின் கட்கரி தகவல்!

0
நாட்டில் சுங்கச் சாவடிக்கு பதிலாக கண்காணிப்பு கேமரா - நிதின் கட்கரி தகவல்!
நாட்டில் சுங்கச் சாவடிக்கு பதிலாக கண்காணிப்பு கேமரா - நிதின் கட்கரி தகவல்!
நாட்டில் சுங்கச் சாவடிக்கு பதிலாக கண்காணிப்பு கேமரா – நிதின் கட்கரி தகவல்!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்கி விட்டு இதற்கு மாற்றாக ஒரு புதிய யோசனையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

சுங்கச் சாவடி

இந்திய முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் அதிகளவு நேரிசல் ஏற்படும். இதனை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாற்று யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமராக்கள் கொண்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏஎன்பிஆர் மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் நேரடியாக வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுத்து கொள்ளவும் வசதிகள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Work From Homeக்கு முடிவு!

இதனை விரைவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2019ம் ஆண்டு முதல் அனைத்து கார்களுக்கும் அந்தந்த தொழிற்சாலைகளிலேயே நம்பர் ப்ளேட் பொருத்துமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நம்பர் ப்ளேட் வைத்து சுங்க சாவடிகளில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, கட்டண வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் தப்பித்து செல்கின்றனர்.

இவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு எந்தவொரு சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரத்யேக நம்ப ப்ளேட்களை பொருத்தி நம்பர் பிளேட் மூலமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும். இதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் பிரத்யேக நம்பர் ப்ளேட்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் சட்டமசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!