தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் – அண்ணா பல்கலை வெளியீடு!

0
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் - அண்ணா பல்கலை வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் - அண்ணா பல்கலை வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் – அண்ணா பல்கலை வெளியீடு!

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் இந்த கல்வியாண்டில் இருந்தே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளும் கூடிய விரைவில் இந்த பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம்:

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும், எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையிலும், காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் சிந்தனை தொழில்நுட்ப திறனை தூண்ட வேண்டும் என்பதற்காகவும் பொறியியல் பாடத்திட்டங்கள் கூடிய விரைவில் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை முன்பே அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இரண்டு பருவங்களிலும் தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டாயமாக முதலாமாண்டு மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் பயிற்சி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி படித்த மாணவர்கள் மட்டும் தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதி கொள்ளலாம் எனவும், மற்ற மாணவர்கள் தமிழில் தான் எழுத வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jio vs Airtel vs Vi ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விவரம்!

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், அதன் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்தாண்டில் இருந்தே தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை பயில்வார்கள் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டிற்குள் தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் பாடங்களை பாடத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கில புலமையை வளர்க்க பயிற்சியும், நன்றாக ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பானியம் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் புதுவகை பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!