தளபதி விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வெளியான ஹாப்பி நியூஸ்!

0
தளபதி விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான ஹாப்பி நியூஸ்!
தளபதி விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான ஹாப்பி நியூஸ்!
தளபதி விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வெளியான ஹாப்பி நியூஸ்!

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22 அன்று அவரது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக சில ஹாப்பி தகவல்கள் வெளியாக உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அளவு கடந்த சந்தோசத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்:

தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகளவில் பல கோடி ரசிகர் பெருமக்களை சம்பாதித்து வைத்திருக்கும் இளைய தளபதியாய் இருந்து தளபதியாக உருவெடுத்த மாஸ் ஹீரோ என்றாலே அது நடிகர் விஜய் அவர்கள் தான். இவரது படம் என்றாலே திரையரங்குகளே அதிரும். அந்த அளவுக்கு தளபதி விஜய் அவர்கள் அவரது நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டு வைத்துள்ளார். சமீபத்தில் அதிக ஹைப்புக்கு மத்தியில் நெல்சன் இயக்கத்தில் அனிரூத் இசையில் வெளியாகிய தளபதி 65 பீஸ்டு படம் வெளியாகியது. இப்படத்தின் கதைக்களம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் விஜய் அவர்களது நடிப்பு, நடனம் என அவர் வந்து போன எல்லா கட்சிகளும் இன்றும் கண் முன் வந்து போகிறது.

மாமனார் சட்டையை பிடித்த ஜீவா’ – பரபரப்பான கட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

அந்த அளவுக்கு வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாமல் மாஸ் காட்டி நடித்திருந்தார். மேலும், தளபதி ரசிகர்களை சந்தோச படுத்தும் வகையில் விஜய் அவர்களின் அடுத்தடுத்த படம் வரிசையில் நிற்கிறது. அதாவது, தளபதி 66 படம் தெலுங்கு பட இயக்குனர் வம்சி அவர்களின் இயக்கத்திலும் ராஷ்மிகா ஹீரோயிடனும் பட சுஷூட்டிங் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. இது பத்தாதுன்னு தற்போது இந்த படம் முடிந்த கையோடு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் ரெடியாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த படம் குறித்து சமீபத்தில் லோகேஷ் அளித்திருந்த பேட்டிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் தற்போது வெளியாகிய விக்ரம் படம் படு ஹிட் கொடுத்ததால் ரசிகர்கள் பலரும் தளபதி 67க்கு வேற லெவல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவ்விதமாக ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் என்பதால் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்ற தகவலும், தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அன்று வெளிவரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!