ஐபில்லில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் – RCB அணியில் சேர்ப்பு!

0
ஐபில்லில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் - RCB அணியில் சேர்ப்பு!
ஐபில்லில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் - RCB அணியில் சேர்ப்பு!

ஐபில்லில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் – RCB அணியில் சேர்ப்பு!

தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபில் தொடரில் சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபில் போட்டிகள் 2021:

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் பிரபலமானது ஐபில் போட்டிகளாகும். T20 போட்டியாக 20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டிகளில் விறுவிறுப்பிற்கு எப்போதும் பஞ்சம் இருக்காத காரணத்தினால் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றது.

IND vs ENG 3rd Test: 71வது சதத்தை பதிவு செய்வார் விராட் கோஹ்லி – பயிற்சியாளர் நம்பிக்கை! 

இந்த நடப்பு ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் கடந்த மார்ச்-ஏப்ரல்-மே மதங்களின் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவியதாலும் கிரிக்கெட் வீரர்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டதனால் இப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைவந்து வந்தாலும் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தினால் கடந்த ஆண்டும் ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களின்றி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தள்ளி வைக்கப்பட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. அதற்காக மேற்கொண்டு வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பெங்களூர் அணி புதிதாக சில வீரர்களை வாங்கியுள்ளது. இலங்கை அணியை சேர்ந்த ஹசரங்கா, துஸ்மந்தா சமீரா மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த டிம் டேவிட் என்ற வீரர்களை வாங்கியுள்ளது.

T20 உலகக்கோப்பை: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் – தினேஷ் கார்த்திக் கோரிக்கை!

ஐபில் போட்டிகளில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. அன்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா நாட்டின் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் கடைசியாக களமிறங்கி அதிரடியாக வெற்றி தேடி கொடுத்துள்ளார். இறுதி கட்டத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறன் கொண்டிருப்பதால் தங்களின் அணிக்கு தேவை என பெங்களூர் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதான் காரணமாக தற்போது பெங்களூர் அணி கூடுதல் பலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!