விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களமிறங்கும் சன் டிவி – வெளியான தகவல்!

0
விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களமிறங்கும் சன் டிவி - வெளியான தகவல்!
விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களமிறங்கும் சன் டிவி - வெளியான தகவல்!
விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களமிறங்கும் சன் டிவி – வெளியான தகவல்!

எப்போதுமே சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்தால் அதைப்போலவே போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி வேறு ஒரு சேனலில் எடுக்கப்படும். தற்போது, விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களமிறங்கும் சன் டிவி புதிய நிகழ்ச்சியை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

புதிய நிகழ்ச்சி:

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்து விட்டால் அதே போல் மற்ற சேனல்களும் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொடங்கி விடுகின்றனர். போட்டிபோட்டுக் கொண்டு பிரபலங்களை சின்னத்திரை நிகழ்ச்சிக்கு இழுத்து வருகின்றனர். உலக நாயகன் கமல், சூர்யா, விஜய் சேதுபதி முதல் பல பிரபல ஹீரோயின்களும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், நடுவராகவும் களம் இறங்குகின்றனர். இதனால் ரியாலிட்டி ஷோ படு ஹிட்டாக ஆரம்பித்து விட்டது.

தமிழகத்தில் செப்.30ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகை போரட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

அந்த வகையில், பிரபலங்கள் சமைக்கும் வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது. இதனால் சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு ரசிகர்களை சென்று சேரவில்லை என்பது வருத்தமே. தற்போது மீண்டும் ஒரு முயற்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்க உள்ளார்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ், ஆனால் தேர்வுகள் உண்டு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

அந்த நிகழ்ச்சிக்கு ‘ராஜபார்வை’ என்று பெயரிட்டு ப்ளாக் ஷீப் நிறுவனம் உருவாக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இளையராஜா என்ற மனிதருக்கு உள்ள தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து எப்படியும் நிகழ்ச்சியை ஹிட்டாக வேண்டும் என்று சேனல் முடிவு செய்துள்ளது. இதற்காக பிரமாண்டமாக விளம்பர வேலைகளை தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி குறித்த முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!