BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!

0
BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!
BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!
BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வங்கிதுறைகளில் பல வகையான மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வங்கிகளும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

புதிய விதிமுறைகள்:

இந்தியாவில் 2022ம் ஆண்டு முதல் வங்கிகளில் பணவர்தனைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் அதற்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.எஸ்பிஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி ஆகியவை சமீபத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியது.

ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

அதனை தொடர்ந்து கனரா வங்கியும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான செக் பரிவர்த்தனைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி பணத்தை கடனாகப் பெறும் வாடிக்கையாளர்கள் 2.5 சதவீத கட்டணத்தை பரிவர்த்தனை கட்டணமாக செலுத்த வேண்டும் அவை 500க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 50 ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்.8ம் தேதி ரத சப்தமி விழா ஏற்பாடு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்தால் அதற்கான அபராத தொகையை உயர்த்தியுள்ளது 100 ரூபாயிலிருந்து ரூ.250 அதிகரிக்கப்பட்டள்ளது. பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 பிளஸ் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!