விஜய் டிவியில் புதிய கதைக்களத்துடன் ‘முத்தழகு’ சீரியல் – ப்ரோமோ வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவியில் புதிய கதைக்களத்துடன் 'முத்தழகு' சீரியல் - ப்ரோமோ வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் புதிய கதைக்களத்துடன் 'முத்தழகு' சீரியல் - ப்ரோமோ வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் புதிய கதைக்களத்துடன் ‘முத்தழகு’ சீரியல் – ப்ரோமோ வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் புத்தம் புதிய முகங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் ‘முத்தழகு’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

புதிய தொடர்

பொதுவாக டிவி சேனல்களில் காலை விழிப்பது முதல் இரவு தூங்க செல்லும் வரையிலும் விடாமல் ஒளிபரப்பப்படுவது சீரியல்கள் தான். அந்த வகையில் மக்களின் ஏகபோக வரவேற்பை பெறும் சீரியல்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு தொடருவது உண்டு. இதில் குறிப்பாக டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்று களமிறக்கப்பட இருக்கிறது. எதிலும் சில புதுமைகளை அளித்து வரும் விஜய் டிவியில் தற்போது வெளியாக இருக்கும் புதிய சீரியலுக்கு ‘முத்தழகு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ – வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்த ‘முத்தழகு’ என்ற பெயரே கதையில் சில ஸ்வாரஸ்யத்தை உள்ளடக்கியதாக தெரிகிறது. அந்த வகையில் ஒரு விவசாய பெண்மணியான முத்தழகின் காளைகளை கடன் கொடுத்தவர்கள் வந்து ஓட்டி செல்கின்றனர். என்றாலும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு தானே ஏர் பூட்டி நிலத்தை உழுகிறார் கதாநாயகி முத்தழகு. இப்படி வேர்வையோடு கடுமையாக உழைக்கும் முத்தழகுக்கு கடவுள் உதவுவாரா என கதாநாயகனின் அம்மா ஏக்கத்துடன் கூறுவது போல இந்த புதிய சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!

என்றாலும் டிவி சீரியல்களில் காட்டப்படாத விவசாய பின்னணி கொண்ட கிராமத்து கதைக்களம் மக்களிடையே வரவேற்பை பெறுமா என்பதை காத்திருந்து பார்ப்போம். இந்த புதிய தொடரில், கதையின் நாயகனான நடிகர் ஆஷிஷ் சக்கரவர்த்தியுடன் நடிகையாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். இப்போது விஜய் டிவியில் ‘முத்தழகு’ சீரியல் விரைவில் வெளியாக இருப்பதால் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏதாவதொரு சீரியல் முடிவுக்கு வர வேண்டும். அது என்னவென்கிற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here