சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சன் தொலைக்காட்சியில் கூடிய விரைவில் செவ்வந்தி என்னும் புத்தம் புதிய நெடுந்தொடர் ஒளிப்பரப்ப உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. குடும்பப்பாங்கான ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறாக இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய நெடுந்தொடர்:

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி முதலிய தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். பெரும்பாலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் அனைவரின் குடும்ப வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகள், காதல் காட்சிகள், நகைச்சுவைகள் என அனைத்தையும் சித்தரித்து காட்டப்படுவதால் மக்கள் அதிகமாக அடுத்து என்ன நடக்கும், என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் ரசித்து பார்த்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், சில சீரியல்களை அந்த சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஒரு சீரியல் புதிதாக ஒளிபரப்பப்பட்டு சில நாட்களிலேயே அந்த சீரியலில் நடித்துவரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் திரையுலக பிரபலங்கள் அளவுக்கு பிரபலமாகி விடுகின்றனர். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருக்கும். ஆனால், கடந்த இரண்டு மாத காலமாகவே விஜய் தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத்தள்ளி சன் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்த வார TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த சன் டிவி ‘கயல்’ – மற்ற சீரியல்களின் முழு பட்டியல் இதோ!

தற்போது சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. எந்த சீரியல் முடிவடைய போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் புதுமுக நடிகையை நடிக்க இருப்பதால் பெருத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது செவ்வந்தி என்னும் புதிய தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் பக்தி கலந்த ஒரு குடும்பப்பெண்ணின் வாழ்க்கைக் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!