கலர்ஸ் தமிழ் “மீரா ஒரு புதுக்கவிதை” சீரியலில் சிறப்பு 1 மணி நேர எபிசோட் – மே தின சிறப்பு!

0
கலர்ஸ் தமிழ்
கலர்ஸ் தமிழ் "மீரா ஒரு புதுக்கவிதை" சீரியலில் சிறப்பு 1 மணி நேர எபிசோட் - மே தின சிறப்பு!
கலர்ஸ் தமிழ் “மீரா ஒரு புதுக்கவிதை” சீரியலில் சிறப்பு 1 மணி நேர எபிசோட் – மே தின சிறப்பு!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான குஷ்பூ, தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “மீரா ஒரு புதுக்கவிதை” என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 1 மணி நேரம் சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா ஒரு புதுக்கவிதை சீரியல்:

90’ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சிறந்த நாயகியாக பிரபலமானவர் நடிகை குஷ்பூ. அவரின் குண்டான தோற்றமே அவருடைய வெற்றிக்கு மூலக் காரணமாக இருந்தது. பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்திருக்கிறார். அதன் பின் அவர் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார் . சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்து இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், அரசியல்வாதி, ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவர் என பல திறமைகளை வைத்திருக்கிறார்.

சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் கேபி நிஜத்திலும் இப்படிபட்டவரா? அவரே கண்ணீர்மல்க அளித்த பேட்டி! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் தற்போது குஷ்பூ கலர்ஸ் தமிழில் சுரேஷ் மேனன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மீரா ஒரு புதுக்கவிதை சீரியலில் நடித்து இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ அதனால் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கதையாக இருக்கிறது. மருத்துவர்களாக இருக்கும் குஷ்பூ மற்றும் சுரேஷ் மேனன், பல ஆண்டுகளாக மனஸ்தாபம் காரணமாக பிரிந்துள்ள நிலையில், குழந்தைகளுக்காக மீண்டும் இணையும் வகையில் அவரை வீட்டிற்கு அழைக்கிறார் கிருஷ்ணா கேரக்டரில் நடித்துவரும் சுரேஷ் மேனன். அவரது எண்ணம் நிறைவேறுமா என்பது நாளைய சிறப்பு எபிசோடில் தெரியவரும்.

Exams Daily Mobile App Download

நாளை மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் இந்த காட்சிகள் அனைத்தும் 1 மணி நேரம் சிறப்பு எபிசோடாக வர இருக்கிறது. ஏற்கனவே மீராவிற்கும் அவரது மகன் அஜய்க்கும் பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாக காட்டப்படும் நிலையில், மீராவை அவர் புரிந்து கொள்வாரா என பரபரப்பான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here