தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய கோரிக்கை! முதல்வரின் முடிவு என்ன?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - முக்கிய கோரிக்கை! முதல்வரின் முடிவு என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - முக்கிய கோரிக்கை! முதல்வரின் முடிவு என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய கோரிக்கை! முதல்வரின் முடிவு என்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் இச்சலுகை வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சலுகை

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் மூலம் 3ம் அலை தொடங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு!

அத்துடன் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைச் செயலாளரின் கீழ் உள்ள பதவிகளில் உள்ளவர்கள் 50% மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும். மீதமுள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருக்க வேண்டும். இந்நிலையில் அரசு அலுவலக கூட்டங்கள் நடைபெற்றால் கட்டாயமான முறையில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள வேண்டும்.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண விதிகளில் மாற்றம்!

இந்த வழிகாட்டு நெறிமுறை ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு ஊழியர்களின் நலன் கருதி மத்திய அரசு அறிவித்த வழிமுறைகளை முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் அரசு ஊழியர்களும் பாதுகாக்கப்படுவார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here