அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி காத்திருக்க தேவையில்லை! புதிய திட்டம் அறிமுகம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி காத்திருக்க தேவையில்லை! புதிய திட்டம் அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி காத்திருக்க தேவையில்லை! புதிய திட்டம் அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி காத்திருக்க தேவையில்லை! புதிய திட்டம் அறிமுகம்!

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ரேஷன் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக உத்தரகாண்ட் மாநிலம் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டு

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் முதியவர்கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் ரேஷன் கார்டுதாரர்கள் உணவு பொருட்களை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் கிடைக்கவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

அத்துடன் ரேஷன் கடைகளில் சரியான எடையில் உணவு பொருட்களை வழங்காமல் குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு தரப்பினர் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. அதாவது, இந்த புதிய திட்டத்தின்படி தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல் இனி தானியங்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் இனி ரேஷன் கடைகளில் காத்திருக்காமல் உங்களுக்கு தேவையான சமயத்தில் தானிய ஏடிஎம்கள் மூலமாக உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய திட்டம் விரைவில் சில மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே ஒரிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!