ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!

0
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததைப் போலவே, 100 சதவீதம் சேவையை ரயில் பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது. இது தவிர பயணிகளுக்கு போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவை மீண்டும் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது என்று இந்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய ரயில்வே துறை:

இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல வர்த்தகங்களும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்திய பொருளாதாரம் மிகவும் குறைவான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்த காரணத்தால் போடப்பட்டு இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து வர்த்தகங்களும் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் – வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

மேலும் தற்போது புதிய நிதியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக போர்வைகள் மற்றும் படுக்கை வசதியை மீண்டும் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் லினன் எனப்படும் படுக்கைக்கான தாள்கள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே அமைச்சகம், ரயில் பெட்டிகளுக்குள் லினன் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை பயணிகளுக்கு வழங்கவுள்ளது. மேலும் இந்திய போக்குவரத்து கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, தேசிய போக்குவரத்து கழகமானது ரயில் பயணிகளின் தேவைக்கேற்ப போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து ரயில் பயணிகள் அவர்களின் நலன் கருதி ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அவர்களின் சொந்த போர்வைகளையே பயன்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். இருப்பினும் சில பயணிகளின் அவசர தேவைக்காக கூடுதலாக சில போர்வைகள் சுத்தம் செய்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!