Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய திட்டம் அறிமுகம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய திட்டம் அறிமுகம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!

அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விரைவில் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அஞ்சல் கணக்குகளில் இருந்து வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்யலாம்.

அஞ்சல் கணக்கு:

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மக்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களது வேலைகளை எளிதாக முடிக்கலாம் அந்த அளவிற்கு இணைய பயன்பாடு பெருகி விட்டது. அதிலும் கொரோனா பரவ தொடங்கிய காலகட்டத்தில் இருந்து மக்கள் தொற்று அச்சத்தால் வெளியில் செல்வதை தவிர்த்து ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம், வங்கி மற்றும் தொழில் சார்ந்த வேலைகள் பொருட்கள் வாங்குதல் போன்ற அனைத்தையும் செய்கின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது அஞ்சலத்திலும் டிஜிட்டல் முறை வந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு – தேர்தல் எதிரொலி!

ஏற்கனவே அஞ்சலக கணக்குதாரர்கள் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். 1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புகள் வரவுள்ளதாக மத்திய பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் நிலைய கணக்குகளில் இருந்து வங்கி கணக்குகள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம்கள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இந்த திட்டம் நாட்டில் நிதி உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. மேற்கண்ட முறைகள் மூலம் ஒரு தபால் அலுவலக கணக்கிலிருந்து மற்ற அஞ்சல் வங்கி கணக்கு மற்றும் வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம். மேலும் இதன் மூலமாக பணம் பரிமாற்றம் தொடர்பான டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தலாம். இந்த திட்டங்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறை பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!