தமிழக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்கான புதிய திட்டம் – காவல்துறை அதிரடி!

0
தமிழக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்கான புதிய திட்டம் - காவல்துறை அதிரடி!
தமிழக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்கான புதிய திட்டம் - காவல்துறை அதிரடி!
தமிழக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்கான புதிய திட்டம் – காவல்துறை அதிரடி!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளுக்கான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் தொடங்க இருப்பதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

புராஜக்ட் பள்ளிக்கூடம்

தமிழகத்தில் பல இடங்களில் தினமும் பெண் குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கூட பெண் குழந்தைகளுக்கான சரியான பாதுகாப்பு கிடைக்காமல் இருக்கிறது. பல இடங்களில் பெண் குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி தெரியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கான குற்றங்களை தவிர்க்க ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் என்ற திட்டத்தை கோவை மாவட்ட காவல்துறையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இது குறித்து கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறுகையில், இந்த திட்டம் பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தான். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு கூட்டம் நடத்தப்படும். அவர்களுக்கு பயிற்சி பெற்ற பெண் போலீசார் பயிற்சி கொடுப்பார்கள். குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை எப்படி முன் வந்து போலீசிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

MOEF மத்திய அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலை – Clerk பணிக்கு ரூ.81,100 ஊதியம்..!

கோவை மாவட்டத்தில் செயல்படும் 997 பள்ளிகளிலும் குழந்தைகள் விழிப்புணர்வு அடையும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு அடிப்படையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். அதாவது ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றால் என்ன ஒருவர் தவறாக அணுகினால் அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது யாரிடம் புகார் செய்வது போன்ற விவரங்கள் சொல்லித்தரப்படும். இணையத்தில் வரும் செய்திகளில் எது நல்லது கெட்டது என சொல்லி தரப்படும். குற்றங்கள் நடந்த ‘ஹாட் ஸ்பாட்’ கிராமங்கள் அடையாளம் கண்டு அங்கு இருக்கும் பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் இந்த பயிற்சி தொடங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!