பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டம்!

0
பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டம்!
பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டம்!
பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டம்!

பேடிஎம் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்கும் வகையில் ஒரு புதிய கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

புதிய திட்டம்:

உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அனைத்து துறைகளின் சேவைகளும் ஆன்லைன் முறையிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. கல்வி முதல் வங்கி வரை அனைத்தும் டிஜிட்டல் தளத்திலேயே தற்போது செயல்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்களும் பலத்த பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில், பல நிதி நிறுவனங்கள் புதிய கடன் திட்டங்களை அறிவித்து வருகிறது.

தமிழக அரசு உதவி பெறும் கல்லூரி காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அந்த வகையில் டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு சொத்து அடமானமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடனாக பெற முடியும். சிறு,குறு தொழில் வியாபாரிகள், சம்பளதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலனடையலாம். இந்த திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே, பேடிஎம் செயலியில் நிதி சேவைகள் என்ற பிரிவில் சென்று விண்ணப்பிக்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிற்குள் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க பேடிஎம் முடிவு செய்துள்ளது. 18 முதல் 36 மாத கால அவகாசத்தில் இஎம்ஐ வசதி அளிக்கப்படும். தனிநபர் கடன் முதல் சிறு குறு அனைவரும் இந்த திட்டத்தில் பலனடையலாம் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!