SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ATM களில் புதிய விதிகள் அமல்!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - ATM களில் புதிய விதிகள் அமல்!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - ATM களில் புதிய விதிகள் அமல்!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ATM களில் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகள் பெருகி விட்டது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுப்பது டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

ஏடிஎம் கட்டணம்:

இந்தியாவில் மக்கள் வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வங்கி சார்ந்த வேலைகளை ஆன்லைன் வாயிலாக செய்து வருகின்றனர். நாட்டில் கொரோனா பரவலுக்கு பின்பு வங்கிகள் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களும் அலைச்சல் இன்றி நேரத்தை மிச்சப்படுத்தி வங்கி வேலைகளை முடிக்க அறிவுறுத்துகிறது. தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் உணவு எண்ணெய்யை சில்லறையாக விற்க தடை? உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி!

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஒரு வருடத்தில் நாற்பது தடவைக்கு மேல் ஏடிஎம்களில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால் டெபாசிட் தொகையிலிருந்து ரூ.57.5 பிடித்தம் செய்யப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ஏடிஎம் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த மாதம் 5 முறைக்கு மேலான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் 1 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 21 வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் பரவி வரும் ஏடிஎம் கட்டணம் குறித்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியதாவது, தற்போது பரவி வரும் ஏடிஎம் தொடர்பான செய்திகள் போலியானது. அதனால் இது போன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் விதிகள் குறித்து இதுவரை பாரத ஸ்டேட் வங்கி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!