தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

0
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள் அமல்!
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள் அமல்!
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்கும் விதமாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியில் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் பதவி ஏற்பட்டுள்ள திமுக ஆட்சி, அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு நிதி நிவாரண தொகை 4000 ரூபாய் வழங்கியது, மேலும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் அளவிலான நகையை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி, இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் நிலவி வந்த வேலைவாய்ப்பின்மையை தடுக்கும் விதமாக அதிக வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகின்றன. இந்த வகையில் பொதுமக்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதுகாப்புக்காக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – 10 ஆண்டுகளில் முதலீட்டு தொகையில் இரட்டிப்பு லாபம்!

அந்த வகையில் சில காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் விதமாக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் போது தொலைபேசி பயன்படுத்துவதாலும், நடத்துனர்கள் பகலில் பணியில் முன் இருக்கையில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டு அமர்ந்து செல்வதால், ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்பட்டு அதிக விபத்துகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான கவன குறைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க தமிழக போக்குவரத்துத் துறை பல்வேறு விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  1. ஓட்டுனர்கள் பணியின் போது சட்டையில் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருத்தல் கூடாது. அதை நடத்துனரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமராமல் பேருந்தின் பின்புறம் கடைசி இடது பின் இருக்கையில் இருந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். தொலைதூர பேருந்துகளில் இரவு 11 முதல் காலை 5 மணி அளவில் முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர் பணிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

3. மேலும் பணி நேரத்தில் ஓட்டுநர் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டாலோ சட்ட பிரிவின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!