ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!

0
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!

ரயிலில் பயணிப்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சக பயணிகள் மொபைலில் சத்தமாக பேசவோ, சத்தமாக வைத்து பாடல்களை கேட்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள்:

இந்தியாவில் அதிக மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கோ, வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கோ ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் வசதியாக இருக்கும். ஏனெனில் ரயிலில் கழிவறை, உணவு போன்ற வசதிகள் உள்ளது. மேலும் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தூங்கி கொண்டே பயணம் செய்யும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கான புதிய விதி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் பயணிப்பவர்கள் பிற பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக பேசவோ, பாடல்களை கேட்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

ரயிலில் சத்தமாக பேசுவதால் பிற பயணிகளின் தூக்கம் கலைவதாக பல புகார்கள் எழுந்து வருகிறது. அருகில் அமர்ந்து பயணிப்பவர்கள் தங்களின் மொபைல் போன் போன்ற பிற சாதனங்கள் மூலம் சத்தமாக பாடல்களை கேட்பதால் உடல் நலம் குன்றியவர்கள், நோயாளிகள் போன்றோர் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுகின்றனர் இதனால் அவர்களுக்கு பயண நேரம் சிரமமாக அமைந்து விடுகிறது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ரயில்வே துறை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!

தற்போதைய புதிய விதிமுறையின் படி, ரயில் பயணிகள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here