வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு – இனி தனிமைப்படுத்துதல் இல்லை!

0
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு - இனி தனிமைப்படுத்துதல் இல்லை!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு - இனி தனிமைப்படுத்துதல் இல்லை!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு – இனி தனிமைப்படுத்துதல் இல்லை!

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த செய்தி விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

கூடுதல் தளர்வு:

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக தீவிரமாக இருந்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஓமைக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கின. இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் ஓமிக்ரான் தாக்கத்தை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அறிக்கை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!

கொரோனா நெகட்டிவ் வந்தாலும் விமான பயணிகள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் சுய கண்காணிப்பை செய்து கொள்ள வேண்டும். இந்த வகையில் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தனிமைப்படுத்துதல் அல்லது சுய கண்காணிப்பின் போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தேசிய அல்லது மாநில சுகாதாரத்துறை உதவி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் இருந்தன.

தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இன்று முதல் விலக்கி கொல்லப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த விமான பயணிகள் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here