EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறை அறிவிப்பு!

0
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறை அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறை அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறை அறிவிப்பு!

இந்தியாவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO நிறுவனம் மூலமாக அனைத்து ஊழியர்களும் PF கணக்கை தொடங்குகிறார்கள். தற்போது இந்நிறுவனம் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் சில தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

EPFO நிறுவனம்

இந்தியாவில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தங்கள் PF கணக்கின் கீழ் சேமிக்கின்றனர். இந்த PF கணக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO நிறுவனம் மூலமாக தொடங்கப்படுகிறது. இந்த சேமிப்பு தொகை பணிக்காலம் முடியும் போது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதில் குறிப்பாக PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குடன் நாமினியை பற்றிய விவரங்களை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை – அரசின் சூப்பர் திட்டம்! விரைவில் அமல்!

இதன் மூலம் ஊழியர்களுக்கு எதிர்பாராத விதமாக மரணம் ஏற்பட்டால் PF தொகையானது அவர்கள் குறிப்பிட்ட நாமினிக்கு வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தற்போது PF கணக்கிலிருந்து LIC-யின் பிரீமியம் கட்டும் வசதியை EPFO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை LIC-யின் பாலிசிக்காக மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் வேறு எந்த பாலிசியிலும் PF கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து செலுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை – அதிபர் அறிவிப்பு!

தற்போது இந்த வசதியை பெறுவதற்கான நிபந்தனைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக PF கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் EPFO-ன் படிவம் 14 ஐ சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக LIC-யின் பாலிசி மற்றும் PF கணக்கை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதையடுத்து தற்போது PF கணக்கை பயன்படுத்தி LIC-யின் பிரீமியம் தொகையை செலுத்த முடியும். இதில் படிவம் 14-ஐ நிரப்பி சமர்ப்பிக்கும் போது தங்கள் கணக்கில் குறைந்தபட்சமாக 2 மாத பிரீமியம் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here