1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் 50% திறனுடன் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வகுப்புகளை நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் வரை பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல்களை மாநில பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா 3ம் அலைப்பரவல் ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இப்போது பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்தியப்பிரதேச பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த அறிவிப்பு துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின் படி, ‘மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளும் 50% திறனுடன் நடத்தப்படும்.

இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பிப்.14 வரை அமல்! மாநில அரசு அறிவிப்பு!

அதே நேரத்தில், மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் தொடரும். இப்போது பள்ளிகளுக்கு வருகை தரும் அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளில் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100% திறனில் கலந்து கொள்ளலாம். அதே நேரத்தில் 6, 7 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% திறன் கொண்ட விடுதி வசதிகள் வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

POST OFFICEன் அதிக வருமானத்தை தரும் RD திட்டம் – ரூ.100 முதலீடு செய்து கணக்கு தொடங்கலாம்!

என்றாலும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பள்ளி பணியாளர்கள், அதிகபட்ச திறனில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போர்டு தேர்வுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையில் ஜனவரி 31 நிலவரப்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தினசரி நேர்மறை விகிதம் 8.6% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here