இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

0
இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் சீனா சென்று அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வரும் ஆண்டில் சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு:

இந்தியாவில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு ஆரம்பத்தில் அதிக மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதே தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க அதிக செலவாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நீட் எனும் நுழைவுத்தேர்வை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களால் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர். குறிப்பாக, சீனா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த நேரத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் படிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா பாதிப்பு – இன்றைய பாதிப்பு ரிப்போர்ட்!

மேலும் சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா செல்வதற்கு கடும் கட்டுப்படும் நிலவுகிறது. மேலும் விமான சேவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நேரடி விமானங்கள் இல்லை. இது குறித்து இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று மருத்துவ படிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சீனாவில் மருத்துவம் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதாவது சீன அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு மருத்துவ படிப்பு மற்றும் ஓராண்டு இன்டர்ன்ஷிப் வழங்கும் 45 பல்கலைக்கழகங்களில் மட்டுமே சேர வேண்டும். பிற கல்லூரிகளில் சேர வேண்டும். ருத்துவ அமர்வுகளுக்கு சீன மொழியான புடோங்குவாவை கற்றுக்கொள்வது அங்கு கட்டாயமாகும். அதனை தொடர்ந்து சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட்-யுஜி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம் பெற வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!