ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – கேஸ் சிலிண்டருடன் இணைப்பது கட்டாயம்!
ரேஷன் கடைகள் மூலமாக , சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகள் தொடர்ந்து அமலுக்கு வருகிறது. அதேபோல், ரேஷன் கார்டுகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது.
புதிய உத்தரவு:
நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜூன் 30ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
பிரதமரின் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பிரீமியம் கட்டணம் உயர்வு!
இந்நிலையில் அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓராண்டில் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு சமீபத்தில் அறிவித்தது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது உத்தரகாண்ட் அரசு இந்த முடிவை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் எரிவாயு இணைப்பு அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க வேண்டும் என, உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கு பின்னரே இலவச சிலிண்டர் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
Exams Daily Mobile App Download
உத்தரகாண்ட் அரசின் இந்த திட்டத்தின் கீழ், அந்த்யோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை மாதத்திற்கு முன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தில் இருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாவட்ட வாரியாக அந்த்யோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனுடன் அந்த்யோதயா கார்டுதாரர்களின் ரேஷன் கார்டை கேஸ் இணைப்புடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள சுமார் 2 லட்சம் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.