புதிய மருத்துவ கட்டுப்பாடு விதிமுறை – மத்திய அரசு விளக்கம்!!
மத்திய அரசின் புதிய மருத்துவ இடஒதுக்கீடு கட்டுப்பாடு தற்போதைக்கு அமலுக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கட்டுப்பாடு:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக 6000 அரசு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, தேசிய மருத்துவ ஆணையம் புதிய மருத்துவ கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, மாநிலத்தின் மக்கள்தொகை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 100 மருத்துவ இடங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
JOB ALERT..! வேலைவாய்ப்பை தேடும் நபர்கள் கவனத்திற்கு – நவ.17 & 18 நேர்காணல்!
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைப்படி கணக்கீடு செய்தால் குறைவான மருத்துவ இடங்களே கிடைக்கும். இதனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் புதிய விதிமுறையை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பினர். அதன்படி, தேசிய மருத்துவ ஆணையம் 2025ஆம் ஆண்டு வரை புதிய மருத்துவ இடஒதுக்கீடு கட்டுப்பாடு அமலுக்கு வராது எனவும், 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆலோசனையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.