போட்டித் தேர்வாளர்களுக்கான புதிய விதிமுறைகள் – மாநில அரசு அறிவிப்பு!!
போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
போட்டித்தேர்வு:
கர்நாடகா மாநிலத்தில் நவ.18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பல்வேறு போர்டு மற்றும் கார்ப்பரேஷன்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் ஹிஜாப் அணிந்து பெண்கள் பங்கேற்கலாம் என தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடைபெறுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.30 மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும், தேர்வாளர்கள் வாய், காது மற்றும் தலையை மறைக்கும் படியாக தொப்பி உள்ளிட்ட ஆடைகளை அணிய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் மாங்கல்யம் மற்றும் காலில் மெட்டி அணிந்துகொள்ளலாம் என தேர்வு ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தேர்வாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்.