பயணிகளின் கவனத்திற்கு.. அமலாகியுள்ள புதிய விதி – இனி குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயம்!

0
பயணிகளின் கவனத்திற்கு.. அமலாகியுள்ள புதிய விதி - இனி குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயம்!
பயணிகளின் கவனத்திற்கு.. அமலாகியுள்ள புதிய விதி - இனி குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயம்!
பயணிகளின் கவனத்திற்கு.. அமலாகியுள்ள புதிய விதி – இனி குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயம்!

நாடு முழுவதும் இதுவரை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்று ரயில் பயணங்களின் போது தனியாக டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது இது குறித்து ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்வே துறை அறிவிப்பு:

ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால், ரயில் பயணத்தில் 5 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் இதனால் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனை குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே வாரியம் இனி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் எடுத்துக் கொள்ள வசதிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கான டிக்கெட் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளி பரிசுத்தொகுப்பு குறித்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – குஷியில் மக்கள்!

Exams Daily Mobile App Download

அதன்படி, நீண்ட தூர பயணங்களின் போது குழந்தைகளுக்கான இருக்கைகள் அல்லது பெர்த்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான டிக்கெட்டுகளின் அதே விலையில் தான் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் ரயில் நிலையங்கள் மற்றும் ஆன்லைன் போர்டல்களில் இருந்து விரைவில் வழங்கப்படும் என்றும், பெற்றோர்களுக்கு தனி இருக்கை தேவையில்லை என்றால் குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!