TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!

TNPSC தேர்வாணையம் அடுத்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் போன்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது TNPSC தேர்வாணையம் அடுத்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!

அத்துடன் தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் மாற்றங்களை TNPSC தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. அதன்படி TNPSC தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் தான் அதற்கு அடுத்த பாடத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. அரசு பணிகளில் அதிகளவு தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இந்த மாற்றமானது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வின் பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் வினாக்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

இந்நிலையில் இவ்வாறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால் குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் எவ்வாறு கேட்கப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை TNPSC தேர்வாணையம் இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் தகுதித்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்களை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் அனைத்து போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!