தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு பணியாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.. இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், அனைத்து மாவட்ட சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் பேரில் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 3,30,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 3,27, 674 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 2,617 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கும். 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. அதனால் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!