தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டில் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

விதிமுறைகள்:
  • தமிழகத்தில் உள்ள பிளே ஸ்கூல்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு ரூ. 2 லட்சம், மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சம் என அங்கீகாரத்துக்கான வைப்பு தொகை செலுத்த வேண்டும். இந்த தொகையானது ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட அதிகம். மேலும் பள்ளி அங்கீகாரத்துக்கு ஆய்வு செய்ய, கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து விலகி பாடம் நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசின் பாடத்திட்டம் சார்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற புத்தகங்களை பயன்படுத்த வேண்டும்.
  • பிளே ஸ்கூலில் மாணவர்களை சேர்க்க 2 வயது எனவும், எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க 3 வயது எனவும் யு.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க 4 வயது, ஒன்றாம் வகுப்புக்கு 5 வயது முடிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வயது ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து நிர்ணயம் செய்ய வேண்டும்
  • மேலும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படித்து, மாற்று சான்றிதழுடன் வரும் மாணவர்கள் கல்வி ஆண்டின் எந்த நேரத்திலும் வேறு பள்ளியில் சேரலாம்.
  • அந்த மாணவர்களுக்கு சிறுபான்மையினர் பள்ளி தவிர, மற்ற பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றலாம்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர், பணியாளர் குழு அமைத்து, அது குறித்த பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த குழு மூலமாக தேர்வு நடத்துதல், மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
  • மேலும் தனியார் பள்ளிகளில், ப்ரீ.கே.ஜி.,யில், ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சம் 15 மாணவர்கள் , எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அதிகபட்சம் 30 பேர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அதிகபட்சம் 35 பேர், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அதிகபட்சம் 40 மாணவர்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பயிற்சி:
  • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்.
  • ஆசிரியர், பெற்றோர், பணியாளர்கள் அடங்கிய பள்ளிக் குழு தலைமை ஆசிரியர் தலைமையில், ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட கூடாது.
  • ஆசிரியர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால், அவர்கள் மீது புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!