இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – துருக்கி அரசு உத்தரவு!

0
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - துருக்கி அரசு உத்தரவு!
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - துருக்கி அரசு உத்தரவு!
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – துருக்கி அரசு உத்தரவு!

இந்தியாவில் இருந்து துருக்கி செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்கள் நாட்டை பாதுகாக்க அனைத்து நாடுகளும் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்றின் தாக்கம் ஆரம்பித்த உடனேயே உலக நாடுகள் மற்ற நாடுகளுடன் தங்களுக்கு உள்ள போக்குவரத்தை நிறுத்தியது. தங்களின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவசர தேவைகளுக்காக பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளையும் அறிவித்தனர்.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? மாநில அரசு ஆலோசனை!

இதனால் முக்கிய போக்குவரத்தான சர்வேதேச விமான போக்குவரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இன்னும் போக்குவரத்து தடை தொடர்ந்து அமலில் உள்ளது. இந்நிலையில், தற்போது துருக்கியில் இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை துருக்கி அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் – அரசுக்கு கோரிக்கை!

துருக்கி வரும் இந்திய பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்திய பயணிகள் மற்றும் தங்களின் பயணத்தின் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் அனைவரையும் கண்டிப்பாக 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here