இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் – மாநில வாரியாக முழு விபரம்!

0
இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் - மாநில வாரியாக முழு விபரம்!
இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் - மாநில வாரியாக முழு விபரம்!
இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் – மாநில வாரியாக முழு விபரம்!

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் தற்போதிலிருந்தே நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தினசரி பாதிப்பு லட்சங்களை கடந்து வந்த நிலையில், தற்போது அது ஆயிரமாக குறைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு 2 இலக்கமாக குறைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிக்கைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தாக்கம் துவங்கியுள்ளதாகவும், இவை அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகள் – யுஜிசி ஒப்புதல்!

இதனிடையே கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்திருந்த மாநில அரசுகள், தளர்வுகளை இறுக்கியுள்ளது. அதன் கீழ் சில மாநிலங்களில் இன்று வரையும் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தவிர பயணிகளுக்கான RT-PCR பரிசோதனை அறிக்கையை சில மாநில அரசுகள் கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறந்த சில மாநிலங்களின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 3) ஒரு நாளில் 45,352 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,289 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 366 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். இதுவரை நோய் தொற்றில் இருந்து 97.45 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதனுடன் கொரோனா 3 ஆம் அலை பரவலை தடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் பட்டியல் இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்,

தமிழ்நாடு:

முதலாவதாக, தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 வரை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமீபத்திய உத்தரவுகளின்படி, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும், கடற்கரைகளுக்கு பொது மக்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான தடை தொடருகிறது. செப்டம்பர் 1 முதல் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கேரளா:

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தது. கடந்த மாதத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய இரண்டு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் அம்மாநிலத்தில் புதிய பாதிப்புகள் பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா:

தொடர்ந்து கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு கர்நாடக மாநில அரசு, ஒரு வார கால தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளது. தடுப்பூசி போட்டவர்களும், RT-PCR எதிர்மறை பரிசோதனை முடிவு வைத்திருந்தாலும் 7 ஆவது நாளில் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவின் குடகு, ஹாசன், தட்சிண கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. திருமணங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் 50% பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மும்பை மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கு புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன் கீழ், அனைத்து சர்வதேசப் பயணிகளும், 2 டோஸ் தடுப்பூசியுடன், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துள்ள RT-PCR பரிசோதனை சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும் தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

அசாம்:

அசாம் மாநில அரசு 2 டோஸ் தடுப்பூசி எடுத்துள்ள பயணிகளுக்கு RT-PCR சோதனைகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அதே நேரத்தில் விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் சாலை வழி மூலம் அசாம் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பயணிகளும், கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசிக்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

ஒடிசா:

ஒடிசா மாநில அரசு செப்டம்பர் மாதத்திற்கான புதிய கொரோனா வழிகாட்டுதல்களை சமீபத்தில் அறிவித்தது. இதன் கீழ், கடைகளை மூடுவதற்கான காலக்கெடு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 1 வரை அமலில் இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!