நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 8 மடங்கு கட்டணம் உயர்வு!

0
நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் - 8 மடங்கு கட்டணம் உயர்வு!
நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் - 8 மடங்கு கட்டணம் உயர்வு!
நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 8 மடங்கு கட்டணம் உயர்வு!

மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதியை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

8 மடங்கு கட்டணம் உயர்வு:

சாலைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயணிப்பதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என புகார்கள் அதிகளவில் வருகின்றன. இந்த புகார் அடிப்படையில் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சர்வதேச அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும். குறிப்பாக, 15 ஆண்டுகளாகி விட்ட பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான் காற்று மாசு அதிகரிக்கிறது என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 13 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!

அதனால் 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதை தடுக்கும் நோக்கில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில் ஏப்ரல் 1 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களின் பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான விலையை உயர்த்த உள்ளது. MoRTH வெளியிட்டுள்ள உத்தரவின்படி, புதிய விலைகள் தற்போதைய விலையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும்.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு – மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!

ஏப்ரல் 2022 முதல் இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பொருந்தும். இருப்பினும், இந்த தீர்ப்பு டெல்லியில் பொருந்தாது, அங்கு முறையே 15 மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மறு பதிவுக்கு பொருந்தாது. இந்த தீர்ப்பின்படி, ஏப்ரல் 1 முதல், 15 ஆண்டுகள் பழமையான காரை புதுப்பிப்பதற்கு தற்போதைய கட்டணமான 600 ரூபாயுடன் ஒப்பிடும்போது, 5,000 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு, 300 ரூபாய்க்கு பதிலாக, 1,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் விலை 15,000 ரூபாய்க்கு பதிலாக 40,000 ரூபாய். இதை அடுத்து நான்கு சக்கர வாகனங்களுக்கான விலையை தற்போதைய விலையை விட எட்டு மடங்குக்கு அதிகமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!