தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தமிழக பள்ளிகளில் இனி கட்டாயமாக நூலக வகுப்புகள் இருக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

மாணவர்கள் நாட்டின் முன்னேற்ற பாதைக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் , அதனால் மாணவர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எப்போதும், தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், பல உதவித்திட்டங்களையும் அரசு அறிவித்து வருகிறது.மாணவர்கள் தனிப்பட்ட காரணங்களினால் கல்வியில் இடைநிற்றல் போன்றவற்றையும் அரசு கூர்ந்து கண்காணித்து, அவர்கள் மீண்டும் தொடர்ந்து படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய மின்திட்டம் – மின் வாரியம் அறிவிப்பு!!

மேலும், மாணவர்களின் தொலைநோக்கு பார்வை, சமூகத்தை பற்றிய அறிவு போன்றவற்றைஅதிகரிக்கும் முக்கிய பணியை நூல்கள் தான் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அணைத்து பள்ளிகளிலும் நூலக வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாயம் வாரத்தில் ஒரு முறை நூலக வகுப்புகள் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஓமைக்ரான் பரவல் காரணமாக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு – அச்சத்தில் பொதுமக்கள்!!

அதில், மாணவர்களுக்கு பல பள்ளிகளில் நூலகப்பயன்பாட்டின் நன்மைகளை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் நூலக வகுப்புகள் வாரத்தில் ஒரு முறை நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் அங்கிருந்து புத்தகக்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கும் படி வசதி ஏற்படுத்த வேண்டும், இதற்கென தனியாக பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். மாணவர்கள் புத்தகங்களை படித்த பிறகு, கட்டுரைகள், நூல் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யலாம். விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து வாசகர்வட்டம் உருவாக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!