Airtel vs Jio vs VI ரூ.400க்குள் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
Airtel vs Jio vs VI ரூ.400க்குள் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Airtel vs Jio vs VI ரூ.400க்குள் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Airtel vs Jio vs VI ரூ.400க்குள் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலையினை அதிக அளவில் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வின் படி சிறந்த விலையில் அதிகபட்ச டேட்டாவை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்:

நாட்டில் உள்ள மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தியுள்ளது. முன்னதாக ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் கடந்த வாரம் தனது புதிய விலை உயர்வினை அறிவித்திருந்த நிலையில், ஜியோ நேற்று விலை உயர்வை அறிவித்தது. ஜியோவின் புதிய திட்டங்கள் டிசம்பர் 1 முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் சிறந்த விலையில் அதிகபட்ச டேட்டாவை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த திட்டங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.400க்குள் புதிய திட்டங்கள்:

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சுமார் 20-25% வரை விலை உயர்வை அறிவித்தது, இது நவம்பர் 26 முதல் அமலுக்கு வந்தது. ஏர்டெல்லின் ரூ. 149 திட்டமானது அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 2 ஜிபி டேட்டாவுடன் வந்த நிலையில், தற்போது ரூ.179 மாற்றமடைந்துள்ளது. ரூ.219 திட்டத்தில் 1ஜிபி தினசரி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் அன்லிமிடெட் கால்களுடன் தற்போது ரூ.265 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் புதிய நபரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ரூ.249 திட்டம் தற்போது ரூ.299 ஆக மாறியுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள், நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ரூ.298 திட்டம் தற்போது ரூ.359 ஆக அதிகரித்து அன்லிமிடெட் கால்கள், 100 எஸ்எம்எஸ்/நாள் நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.

Vodafone-Idea ரூ.400க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள்:

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் ரூ.149 திட்ட தற்போது ரூ.179 ஆக மொத்தம் 2ஜிபி டேட்டாவுடன், ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும், அன்லிமிடெட் கால்கள் வசதியுடன் கிடைக்கிறது. வோடஃபோனின் ரூ.219 திட்டம் இப்போது ரூ.269 ஆக தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்கள் வசதி உள்ளது. வோடஃபோனின் ரூ.249 திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் இப்போது ரூ.299 ஆகும். ரூ.299 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி உடன் கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.400க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் விலையானது டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.129 திட்டத்தில் மொத்தம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவை இப்போது ரூ.155 ல் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.149 திட்டம் ரூ.179 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஏர்டெல் மற்றும் விஐ-யுடன் ஒப்பிடும்போது இது சிறந்த டேட்டா நன்மைகளை கொண்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் மொத்தம் 24 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ATM பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ஜன.1 முதல் அமல்! ரிசர்வ் வங்கி அனுமதி!

ஜியோவின் ரூ.199 திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு 1.5ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் தற்போது ரூ.239க்கு கிடைக்கிறது. ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ரூ.299க்கு கிடைக்கிறது. முதலில் ரூ. 399 விலையில் இருந்த ஜியோவின் அடுத்த திட்டமானது இப்போது ரூ. 479 ஆக உள்ளது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் கால்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!