Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

0
Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நெட்ஒர்க் நிறுவனத்தை தொடந்து VI நிறுவனமும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது விலையேற்றம் செய்யப்பட்ட ஏர்டெல், வோடோபோன் – ஐடியா மேலும் ஜியோ நெட் ஒர்க் நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களை இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் பிளான்கள்:

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது நெட் ஒர்க் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி புரியும் தங்களின் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு பல்வேறு விலை குறைந்த அதிக டேட்டாக்களை தரும் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளது.

TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – முக்கிய விபரங்கள் இதோ!

இதனால் ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டமான 79 திட்டம் விலை ஏற்றப்பட்டு 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனம் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளது. இதனால் மேற்கண்ட நிறுவன வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது நெட் ஒர்க் சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களை விலையேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலையேற்றம் செய்யப்படவில்லை பழைய விலையே தொடர்கிறது.

ஏர்டெல்லின் 179 ரூபாய் பிளான் 1GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை அளிக்கிறது. அதே போல 299 ரூபாய் திட்டம் மேற்கண்ட அதே நன்மைகளுடன் 2 ஜிபி டேட்டாவைவழங்குகிறது. இந்த நிலையில் ஜியோவின் அடிப்படை திட்டத்தின் விலை குறைவு தான். 149 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகிய சலுகைகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஜியோவின் 249 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது.

தமிழகத்தில் DEE தேர்வு முடிவுகள் நவ.29ம் தேதி வெளியீடு – மறுகூட்டல் விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

வோடபோன் – ஐடியா நிறுவனம் ரூ.299 பிளானில் தினமும் 1.5 ஜிபி, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் தற்போது ரூ.359 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வோடபோன்-ஐடியா ரூ.479 பிளானில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும் ரூ.539க்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.549 பிளான்களில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். மற்ற திட்டங்களை தொடர்ந்து ஜியோவின் ரூ.399 ஸ்கீம் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.666 ஸ்கீம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!