Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!

0
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டம் எது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

ப்ரீபெய்டு திட்டம்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் தொலைபேசி இணைப்பு அவசியமாகியுள்ளது. மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இணையத்தின் மூலம் அதிகரித்துள்ளது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மக்களுக்கு அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.597 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.597 திட்டம் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 75GB டேட்டா கிடைக்கிறது. இதில், மேலும் 3 மாதங்களுக்கு தினசரி அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தா கிடைக்கிறது.

ரூ.599 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.599 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மொத்தம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 168 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. தினசரி வரம்பு முடிந்த பிறகு 64 kbps இணையவேகம் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கிறது. மேலும், ஜியோ நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் இலவச சந்தா மற்றும் அணுகல் வசதியும் கிடைக்கிறது.

இந்த இரண்டு திட்டங்களை ஒப்பிடுகையில் 2 ரூபாயில் இரண்டு மடங்கு லாபம் அதிகமாக கிடைக்கிறது. ஆனால் ரூ.597 பிளானுடன் ஒப்பிடும்போது 599 திட்டத்தில் 6 நாட்கள் கூடுதலாக கிடைக்கிறது. அதிக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.599 திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!