ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ரூ.5க்கு டேட்டா திட்டங்கள்!

0
ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ரூ.5க்கு டேட்டா திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ரூ.5க்கு டேட்டா திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ரூ.5க்கு டேட்டா திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகையுடன் கூடிய டேட்டா திட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ஒரு நாளைக்கு கொடுக்கப்படும் டேட்டா அளவுகளில்,நாம் கூடுதலாக பெற்றுக்கொள்ள ரூ.5க்கு கீழ் செலுத்தினால் போதும்.

டேட்டா திட்டம்

தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது பயன்பாட்டிற்காக சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை தேடி வருகின்றனர். ஏனென்றால் கொரோனா முழு முடக்கம் காரணமாக பலரும் வீடுகளில் இருப்பதால், அவர்களுக்கு இணைய சேவைகள் தான் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் வீடுகளில் இருந்து வேலை செய்பவர்களும் அதிகளவு டேட்டா பேக்குகளை விரும்புகின்றனர். இவ்வாறு குறைந்த மதிப்பில் அதிகளவு டேட்டாக்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.

7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!

இந்த டேட்டா அளவுகள் ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்தை பொறுத்து மாறுபடலாம். தவிர அன்லிமிடெட் அழைப்புகள், SMS உள்ளிட்ட சேவைகளை ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டமும் வழங்குகிறது. இந்த வகையில் கொடுக்கப்பட்ட டேட்டா பேக்குகள் முடிவடையும் கால கட்டத்தில், கூடுதலாக 1 ஜிபி டேட்டாவை வழங்கும் சில ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை ரூ. 5 க்கும் குறைவான விலையில், 1 ஜிபி கூடுதல் டேட்டாக்களை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதன் படி,

ரூ.2,121க்கான ரிலையன்ஸ் ஜியோ திட்டம், 336 நாட்கள் செல்லுபடியாகும் என்ற வகையில் மொத்தம் 504 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் முடிவடைந்தால் 4 ரூபாய்க்கு 1 GB கூடுதல் டேட்டாவை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ.2,399 க்கான ஜியோ திட்டம், 365 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக ரூ.3க்கு 1 GB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.2,599 க்கான ஜியோ திட்டம், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன், கூடுதலாக ரூ .3க்கு 1 GB கூடுதல் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மொத்த டேட்டா 740 GB ஆகும்.

ரூ.98க்கான ஜியோ திட்டம், 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ஒரு நாளைக்கு 1.5 GB கிடைக்கிறது. இதன் மொத்த டேட்டாக்கள் 21 GB ஆகும். இவற்றில் ரூ .4 க்கு கூடுதலாக 1 GB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.199க்கான திட்டத்தில் 28 நாட்களுக்கு தினசரி 1.5 GB டேட்டாக்கள் என மொத்தமாக 42 GB கிடைக்கிறது. இதில் ரூ.4க்கு 1 GB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ரூ.249க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 2 GB டேட்டாவுடன் மொத்தமாக 56 GB டேட்டாக்கள் கிடைக்கிறது. இதில் ரூ .4 க்கு 1 GB டேட்டாவை அதிகமாக பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.349 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினசரி 3 GB டேட்டாவை அளிக்கிறது. இதன் மொத்த டேட்டா 84 GB என்ற வகையில் இதில் ரூ .4க்கு 1 GB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.939 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், 56 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 1.5 ஜிபி டேட்டாவில் பயனர்கள் பெறும் மொத்த டேட்டா 84 GB ஆகும். மேலும் ரூ .4 க்கு கூடுதலாக 1 GB பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ.401 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், இது மொத்தம் 90 ஜிபி டேட்டாவை வழங்குவதின் அடிப்படையில் 28 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ரூ .4 க்கு கூடுதலாக 1 GB பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ.444 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால திட்டமாகும். தினசரி 2 GB டேட்டாவை தரும் இந்த பேக்கின் மொத்த டேட்டா 112 GB ஆகும். இதில் ரூ .3க்கு 1 GB கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.555 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவுடன், 84 நாட்கள் செல்லுபடியாகும். இவற்றின் மொத்த தரவு 126 GB கிடைக்கிறது. இதில் ஒரு GB கூடுதல் டேட்டா ரூ .4 க்கு கிடைக்கிறது.

ரூ.599 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் இத்திட்டம் 2 GB தினசரி டேட்டாவை கொடுக்கிறது. இதன் மொத்த டேட்டா 168 ஜிபி ஆகும். இதில் ஒரு ஜிபிக்கு கூடுதலாக ரூ .3 செலுத்த வேண்டும்.

ரூ.999 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், இந்தத் திட்டத்தில் 84 நாட்களுக்கு தினசரி 3 GB டேட்டாக்கள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 252 GB யுடன், கூடுதலாக ஒரு ஜிபிக்கு ரூ .3 செலுத்த வேண்டும்.

ரூ.3499 ரிலையன்ஸ் ஜியோ திட்டம், இது நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டமாகும். இவை 365 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குவதோடு மொத்தமாக 1095 ஜிபி டேட்டாக்களை அளிக்கிறது. இதில் கூடுதலாக ஒரு ஜிபிக்கு ரூ .3 செலுத்த வேண்டியிருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here