தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அப்ரூவல் பெற வழிமுறைகள்!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - அப்ரூவல் பெற வழிமுறைகள்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - அப்ரூவல் பெற வழிமுறைகள்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அப்ரூவல் பெற வழிமுறைகள்!

தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் ரேஷன் கார்டை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது இந்த ரேஷன் கார்டை தற்போது ஆன்லைன் முறையில் சுலபமாக பெறலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் சிலிண்டர் வாங்குவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பது மிகவும் தவிர்க்க முடியாததாகும். மேலும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் 75 லட்சம் பேர்! வெளியான ஷாக் ரிப்போர்ட்!

இந்த திட்டத்தின் மூலமாக சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை தங்களின் கைரேகை பதிவு வைத்து சுலபமாக பெற முடிகிறது. இந்த திட்டம் குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனால் இந்த ரேஷன் கார்டை பெற அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ரேஷன் கார்டை அப்ரூவல் பெறுவதற்கு முன்பெல்லாம் ஒரு மாத காலம் ஆகும். ஆனால் தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டையும் தற்போது ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து எளிதாக பெற முடியும்.

தமிழக ரேஷன் கார்டை ஆன்லைன் முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

1. இதற்கு முதலாவதாக https://tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதனை தொடர்ந்து மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் உள்ள புதிய மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது அடுத்த பக்கத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. அடுத்ததாக Name of family head என்பதன் கீழ் உள்ள கேட்கப்பட்டுள்ளவற்றை நிரப்ப வேண்டும். இதில் ஆங்கிலத்திலும், தமிழிலும் சரியாக விவரங்களை கொடுக்க வேண்டும்.

5. இதையடுத்து குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் 5 MB கொண்ட போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6. அடுத்ததாக அட்டை தேர்வு என்பதில் தேவையான அட்டையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

7. இதனை தொடர்ந்து இருப்பிட சான்று என்பதில் 1 MB கொண்ட கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில்
உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

8. இதையடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை என்பதன் கீழ் குடும்ப உறுப்பினர் பெயர்களை உள்ளிட வேண்டும்.

9. இதனை தொடர்ந்து ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து, ‘சேமி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிப்ரவரி 20ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – தேர்தல் எதிரொலி!

10. அத்துடன் எரிவாயு பற்றிய விவரங்களை உள்ளிட வேண்டும்.

11. இறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, ‘உறுதி செய்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

12. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்றும் குறிப்பு எண்ணும் கொண்ட செய்தி அனுப்பப்படும்.

13. இந்த குறிப்பு எண்ணை கொண்டு தங்களின் ரேஷன் கார்டு நிலையை அறிந்து கொள்ள முடியும்.

14. மேலும் ஆதார் கார்டு, போட்டோ, ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம், விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

15. இறுதியாக தங்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் சரிபார்த்து ஆவணங்கள் சரியாக இருப்பின் 3 நாட்களில் ரேஷன் கார்டுக்கு அப்ரூவல் கிடைத்துவிடும். அத்துடன் 15 நாட்களில் ரேஷன் கார்டை பெற முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here